புத்ரா ஜெயா, டிச 31 – பாதுகாப்பற்ற வாகனத்திற்கு அனுமதி வழங்கியது தொடர்பான விசாரணைக்கு சாலைப் போக்குவரத்துத் துறையின் புஸ்பாகோமைச் சேர்ந்த
மூன்று அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். வங்சா மாஜூவில் நேற்று Ops mengejut Puspakom நடவடிக்கையின்போது பாதுகாப்பற்ற முறையில் இல்லாதபோதிலும் ஒரு வாகனத்திற்கு அனுமதி வழங்கியது தொடர்பான விசாரணைக்காக இன்று காலை 10.30 மணியளவில் மூவர் புத்ரா ஜெயா ஜே.பி.ஜே தலைமையகத்திற்கு வந்ததனர். JPJ அமலாக்கப் பிரிவின் முதிர்நிலை இயக்குநர் முகமட் கிப்லி மா ஹசான் ( Muhammad Kifli Ma Hassan ) இதனைத் தெரிவித்தார். அமலாக்கம், தொழில்நுட்பம் மற்றும் நேர்மை தொடர்பான அம்சங்களில் விசாரணயில் கவனம் செலுத்தப்படும் என அவர் கூறினார்.
வங்சா மாஜூ புஸ்பாகோமைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளும் , மத்திய வட்டாரத்தின் நிர்வாகி என மூவர் விசாரணைக்கு வந்தனர். அந்த மூன்று அதிகாரிகளிடமும் ஜே.பி.ஜே தரப்பினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். Ops Operasi Mengejut சோதனை அமலாக்கத்தின்போது கண்டுப்பிடித்த விவகாரம் குறித்து நடத்தப்பட்டுவரும் விசாரணை எப்போது முடிவடையும் என்று கூறமுடியாது ஒரே வேளை இன்று மாலைவரை இந்த விசாரணை நீடிக்கக்கூடும் என முகமட் கிப்லி தெரிவித்தார். விதிமுறைகள் மீறப்பட்டு, அதிகார மீறல் மற்றும் லஞ்ச ஊழல் போன்ற அம்சங்கள் இதில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். மேல் நடவடிக்கைக்காக இந்த விவகாரத்தை நாங்கள் MACC யின் கவனத்திற்கு கொண்டுச் செல்வோம் என அவர் கூறினார்.