தாசேக் கெலுகோர், நவம்பர்-6 – பினாங்கு, தாசேக் கெலுகோரில் பாராங் கத்தி முனையில் பாகிஸ்தானிய ஆடவரிடம் கொள்ளையிட்டு வைரலான சந்தேக நபரைப் போலீஸ் தேடி வருகிறது.
திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் Jalan Pokok Machang-கில் உள்ள ஒரு மளிகைக் கடையில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
கடைப் பணியாளர் கொள்ளையிடப்பட்டதாக, அம்மளிகைக் கடையின் உரிமையாளரான மாது போலீசில் புகார் செய்தார்.
கல்லாப்பெட்டியிலிருந்து 2,500 ரிங்கிட்டை எடுத்துக் கொண்டு அக்கொள்ளையன் மோட்டார் சைக்கிளில் கம்பி நீட்டினான்.
தலையில் ஹெல்மட் அணிந்திருந்ததோடு, கருப்பு நிற முகமூடி அணிந்திருந்ததால், CCTV-யின் அவனது முகம் தெளிவாகத் தெரியவில்லை.
இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இருப்பின், போலீசைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.