
பார்சிலோனா, ஜூலை 24 – ஸ்பெயின் சாம்பியனான பார்சிலோனா காற்பந்து அணி, மாஞ்செஸ்டர் யுனைட்டெட் அணியின் காற்பந்து வீரர் மார்கஸ் ரஷ்ஃபோர்ட்டை, அடுத்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை தனது அணியில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
வருங்காலத்தில் நிரந்தரமாக ரஷ்ஃபோர்ட்டை தனது அணியில் இணைத்து விட வேண்டுமென்ற எண்ணத்தில் செயல்பட்டு வரும் பார்சிலோனா, ரஷ்ஃபோர்ட்டிற்கு 435,000 அமெரிக்க டாலரை வார சம்பளமாக வழங்கவுள்ளது.
மாஞ்செஸ்டர் யுனைட்டெட் அகாடமியில் வளர்ந்த ரஷ்ஃபோர்ட், கடந்த டிசம்பரில்தான் ப்ரீமியர் லீக் கிளப்பில் கடைசியாக விளையாடினார் என்பதும் மொத்தம் 426 ஆட்டங்களில் 138 கோல்கள் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாஞ்செஸ்டர் யுனைட்டெட்டிலிருந்து பார்சிலோனாவுக்கு செல்வது ஒரு முன்னேற்றமான நிலை என்றாலும் ஆனால் அதனை பெற ராஷ்போர்ட தகுதியானவர் இல்லை என்ற விமர்சனங்களும் எழுந்த வண்ணமாக உள்ளன.