
அம்பாங், நவம்பர்-4 – அம்பாங், புக்கிட் பெர்மாயில் உள்ள முத்தியாரா கோர்ட் அடுக்குமாடி குடியிருப்புகளில் நேற்று காலை இருவேறு சம்பவங்களில் பாறைக் கற்கள் சரிந்து விழுந்ததில், 6 ஆறு வாகனங்கள் சேதமடைந்தன.
முதல் சம்பவம் காலை 8.15 மணிக்கும், இரண்டாவது சம்பவம் காலை 8.50 மணியளவிலும் அடுக்குமாடி குடியிருப்புகளின் வாகன நிறுத்துமிடத்தில் நிகழ்ந்தது.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், அருகேயுள்ள மலைப்பாங்கான பகுதியிலிருந்து பாறைகள் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்திருப்பது கண்டறியப்பட்டது.
சேதமடைந்தன 5 வாகனங்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன; ஆனால் ஒரு கார் மட்டுமே முற்றாக நசுங்கிபோனதாக அம்பாங் ஜெயா போலீஸ் கூறியது.
நல்லவேளையாக உயிரிழப்பு ஏற்படவில்லை.
அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி பாறைகள் மற்றும் மண்ணை அகற்றும் பணியை மேற்கொண்டது.



