கோலாலம்பூர், நவ 14 – இந்தோனேசியாவில் பாலியில் நடைபெற்ற அனைத்துலக புத்தாக்க அறிவியல் போட்டியில் ஜோகூர் , ரினி தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் விருதுகளை வென்று சாதனைப் படைத்தனர்.
அவர்கள் ஒரு தங்கப்பதக்கத்துடன் , இந்தோனேசிய அறிவியலாளர் சங்கத்தின் (IYSA ) சிறப்பு விருது, (MIICA) மற்றும் அனைத்துலக நீதிபதிகளின் விருதையும் வென்றனர்.
இந்த போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் குழுவினர் பங்கேற்றனர். ஆசிரியைகள் திருமதி பவித்திரா மற்றும் ஆசிரியை திருமதி திவியா ஆகியோரின் வழிகாட்டல் துணையுடன் படிநிலை இரண்டைச் சேர்ந்த ஸ்ரீ லெச்மிதா, ச.வந்தனா, கோ,ஹிர்த்தனா மற்றும் பி.பிரேஸ்மா ஆகியோர் இப்போட்டியில் வெற்றி பெற்றனர்.
இம்மாணவர்கள் விஷன் சூப்பர் ஹீரோ IoT காலணி எனும் புத்தாக்கக் கண்டுப்பிடிப்பின் உருவாக்கி சாதனையைப் படைத்தனர். இந்த காலணி பார்வைத்திறன் குறைந்தவர்களுக்கான சிறப்பு தொழிற்நுட்ப நவீன காலணி. இது பயனீட்டாளர்களின் பாதுகாப்பிற்கான அறிகுறிகளை வழங்கி வழிகாட்டும் IoT அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களை தயார்படுத்திய ஆசிரியைகளுக்கும் ரினி தோட்ட தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி தமிழ்ச்செல்வி தனது பாராட்டை தெரிவித்துக் கொண்டார்.