Latestஉலகம்

பாலியில் புளோரஸ் தீவில் கடும் மழையால் திடிர் வெள்ளம்; 13 பேர் பலி

ஜகர்த்தா, செப் 11 – இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலா தீவானா பாலி உட்பட இரண்டு தீவுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 13 பேர் மரணம் அடைந்ததோடு மேலும் அறுவர் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் பெய்த கடுமையான மழையினால் பாலியில் ஐந்து மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது.

பாலி தலைநகர் Denpasar வட்டாரத்தில் சுமார் 200 பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக தேசிய பேரிடர் நிர்வாக கழகத்தின் பேச்சாளர் அப்துல் முஹாரி ( Abdul Muhari ) தெரிவித்தார்.

தொடக்கத்தில் இருவர் மட்டுமே உயிரிழந்தபோதிலும் நேற்று இந்த எண்ணிக்கை 9 ஆக அதிகரித்ததோடு மேலும் இருவர் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே கிழக்கு  Nusa Tenggara வட்டாரத்தில் Flores தீவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 18 கிராமங்களில் போக்குவரத்து மற்றும் தொலைபேசி சேவை வசதிகள் துண்டிக்கப்பட்டன.

Flores, Nagekeo வட்டாரத்தில் திடீர் வெள்ளத்தில் நால்வர் இறந்ததோடு மேலும் நால்வர் காணவில்லையென தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!