பாலேக் பூலாவ், டிச 27 – சிறார் ஆபாச வீடியோ மற்றும் இதர ஆபாச வீடியோக்களை வைத்திருந்த இரண்டு குற்றச்சாட்டுளை ஒப்புக்கொண்ட ஒரு பொறியியலாளருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 6,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. 45 வயதான கோய் லியான் சானுக்கு, சிறார் ஆபாச வீடியோவை வைத்திருந்த முதல் குற்றத்திற்காக 4.000 ரிங்கிட் அபராதம் அல்லது அந்த தொகையை செலுத்த தவறினால் ஆறு மாத சிறையும் விதிப்பதாக மாஜிஸ்திரேட் ChiaHuey Ting தீர்ப்பளித்தார்.
இதர ஆபாச வீடியோக்களை வைத்திருந்த இரண்டாவது குற்றத்திற்கு 2,000 ரிங்கிட் அபராதம் மற்றும் அதனை செலுத்த தவறினால் இரண்டு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி அந்த பொறியியலாளருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். டிசம்பர் 23 ஆம் தேதியன்று இரவு மணி 9.20 அளவில் தாமான் சுங்கை ஆரா பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்த கணினியில் ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததாக கோய் லியான் சான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வீடியோக்களும் மேல் முறையீட்டு நடைமுறைக்குப் பிறகு அகற்றப்படும் என்றும் மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.