
கோலாலம்பூர், செப்டம்பர்-9 – சரவாக், பிந்துலுவில் உள்ள LNG எனப்படும் திரவமயமாக்கப்பட்ட அனைத்து இயற்கை எரிவாயுக் கிடங்குகளிலும் உடனடியாக பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டின் LNG கட்டமைப்புகள் குறிப்பாக பிந்துலுவில் உள்ள கிடங்கிற்கு எதிராக பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் கிடைத்திருப்பதே அதற்குக் காரணம் என, தேசிய பாதுகாப்பு மன்றமான MKN அறிக்கையொன்றில் கூறியது.
அது குறித்த உடனடி விசாரணைகளுக்கும் MKN உத்தரவிட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்த தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும் என்பதால், பொது மக்கள் யூகங்களைக் கிளப்ப வேண்டாம் என்றும் அது கேட்டுக் கொண்டது.
எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள அரசு பாதுகாப்பு நிறுவனங்கள் முழு தயார் நிலையில் இருப்பதாகவும் MKN கூறிற்று.