Latestமலேசியா

பினாங்கில் இந்தோனீசிய மாது கடத்தல்; 4 ஆடவர் மீது குற்றச்சாட்டு

ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-13, இம்மாதத் தொடக்கத்தில் இந்தோனீசியப் பெண்ணை கடத்தி அடைத்து வைத்ததாக, 4 ஆடவர்கள் மீது ஜோர்ஜ்டவுன் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

எனினும், 30 வயது R.நரிந்திரன், 28 வயது M. அரவீன், 25 வயது R. ஜெய்ரூபன், 29 வயது Mohammad Syafiq Segnar Abdullah ஆகியோர் அக்குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினர்.

அந்நால்வரும் இன்னமும் வெளியிலிருக்கும் மற்றொருவருடன் சேர்ந்து, 41 வயது இந்தோனீசிய மாதுவை வலுக்கட்டாயமாகக் கடத்தியதாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

பிறை, ஜாலான் பாரு, Palma Laguna Waterpark அடுக்குமாடி வீட்டில் அடைத்து வைக்கும் நோக்கில், டிசம்பர் 5 இரவு 8 மணி முதல் 7-ம் தேதி வரையிலானக் காலக்கட்டத்தில் அவர்கள் அக்குற்றத்தைப் புரிந்துள்ளதாக, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

நால்வரும் தலா 8,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தில் ஜாமீனில் வெளியாகினர்.

ஜனவரி 21-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!