
ஜோர்ஜ் டவுன், பிப் 13 – பினாங்கு Jalan Masjid Negeri, சுரங்கத்தில் காருடன் மோதிய மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் மரணம் அடைந்தார். 46 வயதுடைய பெண்மணி ஓட்டிச் சென்ற காரில் மோதிய பின் 21 வயதுடைய உள்நாட்டு ஆடவர் இறந்தார்.
அந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வானத்தில் மோதியதாக நம்பப்படுகிறது. நேற்றிரவு மணி 7.30 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் கடுமையாக காயம் அடைந்த அந்த இளைஞர் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடு சிகிச்சை வழங்கப்பட்டபோதிலும் அதிகாலை மணி 1.10 அளவில் மரணம் அடைந்தார்.
இந்த விபத்தில் கார் ஓட்டுனர் காயம் அடையவில்லை. எனினும் அக்காரில் இருந்த 11 வயது பிள்ளை காயம் அடைந்ததாக பினாங்கு வட கிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி அப்துல் ரொசாக் முகமட் ( Abdul Rozak Muhammad ) தெரிவித்தார்.
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் விசாரணைக்கு உதவ அருகேயுள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இநத விபத்து தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது