
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 25 – வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்கள் வெளியில் கசிந்ததை தொடர்ந்து டீலைவ், பபிள் டீ துரித பான கடை பகிங்கரமாக மன்னிப்பு கோரியுள்ளது.
இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமலிருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
தலைநகரிலுள்ள பேரங்காடி ஒன்றில் அமைந்துள்ள அதன் கிளை கடையில், தான் ஆர்டர் செய்த பானம் தாமதமாக தயார் செய்யப்பட்டதோடு, அங்குள்ள ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதை விட்டுவிட்டு, அளவளாவிக் கொண்டிருந்ததால், அதிருப்தியடைந்த ஒரு ஆடவர், அந்த சூழலை பதிவு செய்ததோடு, அதன் டீலைவ் நிறுவனத்தின் தலைமையகத்தில் புகாரும் அளித்துள்ளார்.
ஆனால், தனிப்பட்ட முறையில் வாடிக்கையாளராக அவர் செய்த புகாரைத் தொடர்ந்து, பின்னர் ஒரு பெண் சம்பந்தப்பட்ட அந்த ஆடவருக்கு வாட்சேப் செய்து தகறாற்றிலும் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்த சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் வாடிக்கையாளர் தரவுகளை அந்நிறுவனம் எப்படி வெளியிட முடியும் என காணொளி ஒன்றை வெளியிட்டு கேள்வி எழுப்ப்பினார். இது வலைத்தளவாசிகளின் கவனத்தைப் பெற்றதோடு, பல கலவையான கருத்துகளையும் அக்காணொளி குவித்தது.
இதனிடையே, இச்சம்பவம் குறித்தி டீலைவ் நிறுவனம் மன்னிப்பு கோரியதோடு, மீண்டும் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் தடுக்க அதன் உள் நடைமுறைகளை உடனடியாக மதிப்பாய்வு செய்து வலுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.



