ஜோர்ஜ்டவுன், செப் 19 – 14ஆம் திகதி செப்டம்பர் மலேசியாவிற்குச் சுற்றுலா வந்த சீன நாட்டைச் சேர்ந்த தந்தை, மகளான இருவர் இன்று நாடு திரும்பவிருந்த நிலையில், நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.
பினாங்கு, ஜார்ஜ்டவுன், லெபுக் கெரேஜா- வில் உள்ள பாரம்பரிய கட்டடத்தில் கான்கிரட் பாறாங்கல்லை இடித்துத் தள்ளியவாறு ராட்ஷச மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு அவர்கள் பயணித்த வாகனம் மீது சாய்ந்தது.
அதில் வாகனத்தின் முன்னிருக்கையில் 30 வயது மகளும், பின் இருக்கையில் அமர்ந்திருந்த 50 வயது தந்தையும் துர்தஷ்டவசமாக மரம் சாய்ந்து நசுக்கப்பட்டத்தில், கடும் காயங்களுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தனர்.
இந்நிலையில், இவர்களின் குடும்பம் உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் உடலைக் பெற்றுக்கொள்ள வருவார்கள் என வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவரும் உதவி ஆணையருமான ரஸ்லாம் அப்துல் ஹமீத் (Razlam Ab Hamid) தெரிவித்தார்.