
ஜோர்ஜ் டவுன் , டிச 22 – பினாங்கில் கனத்த மழையால் ஏற்பட்ட வேர் அழுகல் காரணமாக, சனிக்கிழமை ஜாலான் பினாங்கில் 30 ஆண்டுகள் பழமையான மரம் சரிந்து விழுந்ததில் இருவர் காயம் அடைந்தனர்.
ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு சக்கர வாகனம் மீது அந்த மரம் விழுந்தது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் இருந்தவர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர். அதே நேரத்தில் நான்கு சக்கர வாகனத்தில் இருந்தவர்களில் எவரும் காயம் அடையவில்லை.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பணியாளர்களின் உதவியுடன் பினாங்கு தீவு நகரான்மைக் கழகம் உடனடியாக சம்பவ இடத்தில் மரத்தை அகற்றும் பணிகளை மேற்கொண்டது.
இந்த மரம் புசிடா மோலினெட்டி ( Bucida Molineti ) என்ற வகையைச் சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டதோடு , அது சுமார் 10 மீட்டர் உயரமும், 1. 2 மீட்டர் சுற்றளவும் கொண்டதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.



