
பினாங்கு, டிசம்பர் 16 – நேற்று, பினாங்கு ஜெலுத்தோங் ஜாலான் லெங்கோங் சாலையில் அமைந்துள்ள ஒரு உணவகத்திற்கு முன்பு ஏற்பட்ட தகராறில் தொடர்புடைய ஆறு ஆண்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கார் விற்பனை தொடர்பான சர்ச்சைதான் இந்த கடும் மோதலுக்கு முக்கிய காரணமென்று வடகிழக்கு மாவட்ட காவல் துறைத் தலைவர் Abdul Rozak Muhammad தெரிவித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், 25 முதல் 28 வயதுடைய 6 உள்நாட்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேர் விசாரணைக்காக மூன்று நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்டு மேல் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
பினாங்கில் ஆண்கள் குழு ஒன்று உணவகத்தின் முன் தகராறில் ஈடுபடும் காணொளி வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அந்தக் காணொளியில், ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.



