
ரந்தாவ் பஞ்சாங் , அக் 15 – சுமார் 90,000 ரிங்கிட் மதிப்புள்ள
போலி கைப்பைகளை பொது நடவடிக்கைப் படையினர் பறிமுதல்
செய்தனர். நேற்று மாலை மணி 6.20 அளவில் பொது நடவடிக்கை படையின்
ஏழாவது பட்டாளத்தை சேர்ந்த குழுவினர் சந்தேகத்திற்குரிய லோரி ஒன்றை பரிசோதனை செய்தபோது அதில் இந்த கைப்பைகள் இருந்ததை கண்டுப்டிபிடித்தனர். தாய்லாந்திலிருந்து வந்த லோரியில் அந்த கைப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக நம்பப்படுவதோடு அந்த
கைப்பைகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லையென்றும் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த லோரி ஓட்டுனரும் அதன் உதவியாளரும்
கைது செய்யப்பட்டதாக பொது நடவடிக்கைப் படையின் தென்கிழக்கு வட்டார கமாண்டர் டத்தோ நிக் ரோஸ் அஸஹான் ( Nik Ros Azhan ) தெரிவித்தார். உள்நாட்டில் வாங்கப்படுபவர்களுக்கு விநியோகிக்கப்படுவதற்காக அந்த கைபைகளை கொண்டு வருவதற்கு ஆடவர் ஒருவர் அந்த லோரி ஓட்டுனரையும் அதன் உதவியாளரையும் நியமித்தாக Ros Azhan கூறினார்.