
பாயான் லெப்பாஸ், மார்ச்-13 – நண்பரின் பயணப் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக நகைச்சுவையாகக் கூறப் போய், 64 வயது முதியவர் பினாங்கு பாயான் லெப்பாஸ் அனைத்துலக விமான நிலையத்தில் கைதானார்.
திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், அந்த உள்ளூர் ஆடவரும் 60 வயது நண்பரும் சீனாவுக்குப் பயணமாகவிருந்தனர்.
பொருட்கள் பரிசோதனைச் சாவடியைக் கடக்கும் போது, நண்பரின் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக அவர் ‘நகைச்சுவை’ செய்தார்.
எனினும் உடனடியாக இருவரின் பயணப் பெட்டிகளுமே பரிசோதனை செய்யப்பட்டு, எந்தவொரு ஆபத்தான பொருளும் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டது.
குற்றச்செயல் மிரட்டல் விடுத்தன் பேரில் இருவரும் கைதாகி சனிக்கிழமை வரை விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டனர்.