Latestமலேசியா

பினாங்கைச் சேர்ந்த 65 வயது பெண்ணுக்கு ஜேக்போட்டில் RM23.9 மில்லியன் பரிசுத்தொகை

கோலாலம்பூர், அக் 17 – பினாங்கைச் சேர்ந்த 65 வயது பெண் ஒருவர் , தனது மாமாவின் இறுதிச் சடங்கில் இருந்து கணக்கிட்ட எண்களைக் கொண்டு பெரும் தொகையை  பரிசுப் பணமாக வென்றார்.  அக்டோபர் 1 மற்றும் 12 தேதிகளில்  டோட்டோ  4D   ஜாக்பாட்டின் 23.9 மில்லியன் ரிங்கிட் பங்கை மூன்று நபர்களுக்குப் பிரித்ததால், அந்த முடிவு அந்த பெண்ணுக்கு பெரும் தொகையை பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. 

முறையே  சிஸ்டம் ப்ளே  (System Play ) மற்றும் நிலையான டிக்கெட்டை வாங்கிய ஜோகூரைச் சேர்ந்த பெண்ணும் மற்றொரு வெற்றியாளரும் ஜாக்பாட்டின்  பரிசுத்தொகையை  ஒரு கோடியே 10 லட்சத்து 35,125 ரிங்கிட்டை  (RM11,035,121.25) பகிர்ந்துக் கொண்டனர்.  

மலாக்காவைச் சேர்ந்த  மற்றொரு வெற்றியாளர்   சிஸ்டம் டிக்கெட்டில் ( I -System )டிக்கெட்டில்  18  லட்சத்து  39,186 ரிங்கிட்  85 சென்னை ( 1,83,9,186,85 )வென்றார்.  

பல மாதங்களுக்கு முன்பு தனது மாமாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டபோது, ​​தனக்கு 5088 மற்றும் 2323 ஆகிய வெற்றி எண்கள் கிடைத்ததாக பினாங்கு பெண்மணி  கூறினார். எனது மாமாவின் பிரியாவிடை பரிசு இந்த தொகை என அவர் வருணித்தார்.  நான் சிஸ்டம் 7 டிக்கெட்டை வாங்கினேன், ஏனென்றால் இறந்தவர்களுக்கான அஸ்தி, சவ வாகனம் ,இறந்தவர்களுக்கான பேப்பர் வீடு போன்றவற்றை அடிப்படையாக கொண்ட எண்களை இணைத்து எழுதியதாக  அவர் கூறினார். 

மொத்தத்தில், பினாங்கு, ஜோகூர், மேலாக்கா மற்றும் சிலாங்கூரைச் சேர்ந்த நான்கு வெற்றியாளர்கள் டோட்டோ 4டி ஜாக்பாட் 1 மற்றும் பவர் டோட்டோ 6/55 ஆகியவற்றிலிருந்து மொத்தம் RM28.6 மில்லியனை வார இறுதியில் வென்றுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!