பாரீஸ், ஜனவரி-12, பிரான்ஸ் நாட்டின் Strasbourg நகரில் 2 டிராம் இரயில்கள் சுரங்கப்பாதையில் மோதிக் கொண்டதில், குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் பாரீசுக்கு வெளியே மிகவும் பரபரப்பான இரயில் நிலையங்களில் ஒன்றில் அவ்விபத்து நேர்ந்தது.
தொடக்கக் கட்ட விசாரணையில் சுமார் 36 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அவ்வெண்ணிக்கை 50 பேரைத் தாண்டலாமென தீயணைப்பு மீட்புப் படையினர் கூறினர்.
சுரங்கப்பாதையில் 2 டிராம் இரயில்கள் நேருக்கு நேர் மோதி சேதமுற்றதையும், உதவிக் கோரி அழுகுரல்கள் கேட்பதையும் வைரலான வீடியோக்களில் பார்க்க முடிகிறது.
உடனடி விசாரணைகள் தொடங்கியுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் இல்லை.
1960-ஆம் ஆண்டில் டிராம் சேவை நிறுத்தப்பட்ட பிறகு, 1994-ல் மீண்டும் அதனைத் தொடக்கிய முதல் பிரெஞ்சு நகரம் Strasbourg ஆகும்.
அச்சேவை மீண்டும் தொடங்கியதிலிருந்து அங்குப் பெரிய அளவில் விபத்துகள் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.