Latestஉலகம்

பிரிட்டனில் நண்பர்கள் மீதே சுத்தியல் தாக்குதல் நடத்திய மலேசிய மாணவனுக்கு வாழ்நாள் சிறை

லண்டன், நவம்பர்-2, பிரிட்டனில் தங்கிப் படிக்கும் பள்ளியில் இரு மாணவர்களையும் ஓர் ஆசிரியரையும் சுத்தியலால் தாக்கியதற்காக வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மலேசிய மாணவனின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

பதின்ம வயதைக் காரணம் காட்டி பெயரை வெளியிடக் கூடாதென்ற உத்தரவை, Exeter Crown மாவட்ட நீதிமன்றம் மீட்டுக் கொண்டதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் 17 வயது Thomas Huang என பத்திரிகைகள் அடையாளம் கூறின.

கடந்தாண்டு ஜூனில் நடந்த அச்சம்பவம் தொடர்பில் 3 கொலை முயற்சி குற்றச்சாட்டுகளை அம்மாணவன் எதிர்நோக்கியிருந்தான்.

தனக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருந்ததாகவும் அதன் போது அந்த அசம்பாவிதம் தெரியாமல் நடந்து விட்டதாகவும் Huang கூறியதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

அவன் நடத்திய சுத்தியல் தாக்குதலில், உடன் தங்கியிருந்த நண்பர்கள் தலையிலும் நுரையீரலிலும் படுகாயம் அடைந்ததோடு, உள் இரத்தகக் கசிவுக்கும் ஆளாகினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!