
லண்டன், மார்ச்-24 – இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, கடற்கரையில் “எலும்புக்கூடு போன்ற” ஓர் அரிய உருவத்தைக் கண்டதாக தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
அவர்கள் பார்த்ததாகச் சொல்லும் அந்த ‘உயிரினம்’ துடுப்புகளைக் கொண்டிருந்ததோடு ஒரு கடற்கன்னி போல தோற்றமளித்ததாம்.
X தளத்தில் அத்தம்பதி பகிர்ந்த புகைப்படங்கள், அந்த மர்ம ‘உயிரினம்’ மணலில் பாதி புதைந்து, கடற்பாசியால் சூழப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.
இது பார்ப்பதற்கு, ஒரு மீனின் வால் மற்றும் வேற்றுகிரகவாசி போன்ற உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் செதுக்கப்பட்ட ‘மர உயிரினமாகத்’ தெரிகிறது.
அந்த ‘உயிரினத்தை’ கண்டு அங்குக் கூடிய மக்களுக்கும் அது என்னவாக இருக்குமெனப் புலப்படவில்லையாம்.
கப்பல் அல்லது படகிலிருந்தோ அது விழுந்திருக்கலாமென சிலர் கூறிக் கொண்டார்களாம்.
“நல்லவேளையாக கண்ணால் கண்டதை நாங்கள் புகைப்படமாக எடுத்தோம்; இல்லையென்றால் நாங்கள் சொல்வதை யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்” என அத்தம்பதியும் கூறிக் கொண்டது.
கடற்கரைகளில் இது போன்ற வினோத ‘பொருட்கள்’ காணப்படுவது இது முதன் முறையல்ல.
ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்களைக் கேள்விப் பட்டிருக்கிறோம் என வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.