
பொந்தியான், அக்டோபர்-28,
ஜோகூர், பொந்தியானில் பிரேக்கிற்குப் பதிலாக எண்ணெயை அழுத்தியதால், முதியவரின் கார் பெட்ரோல் நிலையத்தில் மோதி நின்றது.
திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு பெக்கான் பெர்மாஸில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக மாவட்ட போலீஸ் கூயது.
வீட்டிலிருந்து காரில் வந்த முதியவர், பெட்ரோல் நிலையத்தில் நுழையும்போது பிரேக்கில் கால் வைக்காமல் ஆக்ஸிலேட்டரை அழுத்தி விட்டார்.
இதனால் கார் முன்னே சென்று கண்ணாடி கதவை உடைந்து பெட்ரோல் நிலையத்திற்குள் புகுந்து விட்டது.
நல்ல வேளையாக, வலது காலில் சிறிய காயத்தோடு அவர் உயிர் தப்பினார்.
பொந்தியான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு அவர் வீடு திரும்பினார்.
இச்சம்பவத்தை போலீஸ் விசாரித்து வருகிறது.



