
செபு , நவ 5 – Philippinesஸில் , வீசிய மோசமான கல்மேகி ( Kalmaegi ) புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்தது .
புயலைத் தொடர்ந்து அண்மையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட Cebu மாநிலத்தில் வசிப்பவர்கள் தங்களின் வீடுகள் மற்றும் வணிக மையங்களிலிருந்து வெளியேறினர்.
இதற்கு முன் இல்லாத அளவுக்கு வெள்ளம் நகரங்களில் புகுந்ததால் கார்கள், லாரிகள் , மற்றும் கொள்கலன்கள்கூட அடித்துச் சென்றன.
Cebuவில் 49 பேர் உயிரிழந்ததாக சிவில் பாதுகாப்பு துணை நிர்வாகி ரபேலிட்டோ அலெஜான்ட்ரோ ( Rafaelito Alejandro ) உள்ளூர் வானொலி நிலையமான DZMM க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
பெரிய நகரங்களும் மக்கள் கூட்டம் நிறைந்த நகர்ப்புற பகுதிகளும் புயல் மற்றும் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேளையில் இன்னமும் 26 பேர் காணவில்லை என அறிவிக்கப்பட்டது.
வெள்ளம் வடிந்த பகுதிகளில் சாலைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதில் பெரிய சவால்கள் இப்போது காத்திருப்பதாக Rafaelito சுட்டிக்காட்டினார்.
வெள்ளப் பேரிடரால் சிறு கடைகளில் இருந்த பல பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
புயல் மழையால் ஆறுகளிலிருந்து வெள்ள நீர் கரைபுரண்டதால் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட சுமார் நான்கு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். புயல் நிவாரண பணிக்கு அனுப்பிவைக்கப்பட்ட நான்கு helicopterகளில் ஒன்று மின்டோனோ (Mindanao )தீவின் வட பகுதியில் விபத்துக்குள்ளனாது.
அந்த விபத்தில் இறந்த அறுவரின் உடல்கள் மீட்கப்பட்டன. இரு ஓட்டுனர்கள் மற்றும் நான்கு ஊழியர்கள் அந்த helicopterரில் இருந்ததாக விமானப் படையின் பெண் பேச்சாளர் கர்னல் மரியா கிறிஸ்டீனா பஸ்கோ ( Maria Christina Basco ) தெரிவித்தார்.



