
புக்கிட் காயூ ஹீத்தாம், டிசம்பர் 23 – நேற்று புக்கிட் காயூ ஹீத்தாம் ICQS எல்லை சோதனை மையத்தில், மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 5 வெளிநாட்டவர்களை மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆணையமான AKPS தடுத்து நிறுத்தி அவர்களின் நுழைவைத் தடை செய்துள்ளது.
அவர்களில் மியான்மார், தாய்லாந்து மற்றும் சீனாவைச் சார்ந்த மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் உள்ளடங்குவர் என்று புக்கிட் காயூ ஹீத்தாம் AKPS துணை இயக்குநர் Noor Azam Ahmad தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த கடப்பிதழ், தகுந்த ஆவணங்கள் இல்லாதிருத்தல், நுழைவு நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததல் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என்று கூறி கொண்டு நாட்டிற்குள் நுழைய முற்பட்டல் ஆகிய குற்றங்களுக்காக அவர்களின் நுழைவு மறுக்கப்பட்டுள்ளது. பின்பு அவர்கள் அனைவரும் அவரவரின் சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நுழைவு விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்படுவதாக AKPS மீண்டும் வலியுறுத்தியுள்ளது.



