
பட்டர்வெர்ட், மார்ச்.12 – புக்கிட் மெர்தாஜாமில் பினாங்கு சுங்கத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 267,854 ரிங்கிட் மதிப்பிலான புகையிலை, மது பொருட்கள் மற்றும் ஆபத்தான பட்டாசுகள் போன்ற வரி ஏய்ப்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3,665 மது பாட்டில்கள் , 13,836 மது டின்கள், 555,600 புகையிலை ஸ்டிக்ஸ், 718 பெட்டி பட்டாசுகள் மற்றும் 468 பெட்டி ம்தீப்பொறி பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டவற்றில் அடங்கும். இந்தப் பொருட்கள் அனைத்தும் கிடங்கு ஒன்றில் வைக்கப்பட்டுருந்தன. தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பினாங்கு சுங்கத்துறை கூறியுள்ளது.
இதனிடையே, இது தொடர்பாக தகவல் தெரிந்த பொதுமக்களின் உதவியை நாடுகிறது பினாங்கு சுங்கத்துறை.