
பெசுட், டிச 15 – பெசுட் கம்போங் ராஜா, கம்போங் அலோர் லிண்டாங்கில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் நேற்று மாலை கைவிடப்பட்டதாக நம்பப்படும் புதிதாகப் பிறந்த ஆண் சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
16 வயது இளம் பெண் ஒரு குடும்ப உறுப்பினருடன் யாருக்கும் தெரியாமல் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை தகாத உறவில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது என பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் தலைவர் துணை கண்காணிப்பாளர் முகமட் சனி முகமட் சாலே ( Md Sani Md Saleh) தெரிவித்தார்.
சந்தேக நபர் வீட்டில் வசிப்பவர்களால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே குழந்தையை கைவிட்டுவிட்டதாக நம்பப்படுகிறது. இந்த விவகாரம் தண்டனைச் சட்டத்தின் 317 ஆவது பிரிவு மற்றும் தண்டனைச் சட்டத்தின் 376 B பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
குழந்தை பெற்ற பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விசாரணைக்கு உதவுவதற்காக ஆடவன் ஒருவன் இன்று முதல் ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.



