Latestமலேசியா

புத்ரா ஜெயாவில் கிரேன் இயந்திரம் கவிழ்ந்து இரு இந்தோனேசியா குத்தகை தொழிலாளிகள் மரணம்

புத்ரா ஜெயா, டிச 5 – கட்டிடத்தில் வர்ணம் பூசும் தொழிலாளர்களை ஏற்றிச் சென்றபோது கிரேன் இயந்திரம் கவிழ்ந்ததில் அதிலிருந்த இந்தோனேசியாவின் இரண்டு குத்தகை தொழிலாளர்கள் மரணம் அடைந்ததோடு மற்றொரு தொழிலாளி காயம் அடைந்தார். இந்த சம்பவம் புத்ரா ஜெயா பிரிசின்ட் 8 , Fasa 4 C, புளோக் A வில் இன்று காலை மணி 9.20 அளவில் ஏற்பட்டதாக புத்ரா ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ACP அய்டி ஷாம் முகமட் ( Aidi Sham Mohamed) தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து பொதுமக்களில் ஒருவரிடமிருந்து காலை மணி 9.40 அளவில் தகவல் பெற்றதாக அவர் கூறினார்.

விபத்து நிகழ்ந்த இடத்திலேயே 54 வயதுடைய சுகாவான் வில்கான் ( Sukawan Wilkhan ) இறந்ததாகவும் , 53 வயதுடைய டானியான்தோ யுசாக் ( Danianto Yusak ) மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் மரணம் அடைந்தார். யாசின் ( Yasin என்ற மற்றொரு தொழிலாளி காயம் அடைந்ததைத் தொடர்ந்து புத்ரா ஜெயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த கிரேன் இயந்திரத்தின் Jack hidraulik நிலத்தில் அமிழ்ந்ததால் அது சமநிலை இழந்ததால் கவிழ்ந்ததாகவும் அப்போது மூன்று இந்தோனேசிய தொழிலாளர்களும் கட்டிடத்தின் மேலே வர்ணம் பூசுவதற்காக( bucket kren ) னில் இருந்ததாக அய்டி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!