
சுபாங் ஜெயா, ஏப் 2 – புத்ரா ஹைட்ஸில் நிலத்திற்கு அடியில் எரிவாயு குழாய் தீ விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஊராட்சி மன்ற அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததாக சுபாங் ஜெயாவின் மேயர் உறுதிப்படுத்தியுள்ளார்.
IWK எனப்படும் Indah water konsortium நிறுவன (IWK) வழித்தடத்திற்கான Right-of-way (ROW) வைப் பயன்படுத்த பெட்ரோனாஸின் அனுமதியைப் பெறுவது உட்பட, இந்த திட்டம் 2022 ஆம் ஆண்டில் முறையான ஒப்புதல் செயல்முறைக்கு ஒப்புதல் பெறப்பட்டதாக சுபாங் ஜெயா மேயர் டத்தோ அமிருல் அஸிஸான் அப்துல் ரஹிம் ( Amirul Azisan Abdul Rahim ) கூறினார்.
சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் IWK மற்றும் பெட்ரோனாஸால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் உள்ளார் என்று அவர் இன்று சம்பவக் கட்டுப்பாட்டு இடுகையில் தெரிவித்துள்ளார்.
பெட்ரோனாஸ், போலீஸ் மற்றும் இந்த திட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவடையவிருந்தது, ஆனால் நிறைவு மற்றும் இணக்கச் சான்றிதழை (CCC) பெறுவதில் தாமதங்களை எதிர்கொண்டதாக அமிருல் அஸிஸான் மேலும் கூறினார்.
தாமதத்திற்கான சரியான காரணம் எனக்குத் தெரியவில்லை. அனைத்து ஒப்புதல்களும் நிறுவப்பட்ட நடைமுறைகளின்படி பெறப்பட்டன என்பது உறுதியாகும்.
மேலும் இந்த திட்டம் அனைத்து நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கும் இணங்குகிறது என்று அவர் கூறினார். இந்த சம்பவம் தொடர்பில் பல நிறுவனங்கள் இன்னும் விசாரித்து வருவதால், அதிகாரிகள் இப்போதைக்கு அதிகாரப்பூர்வ பதிலை வெளியிட மாட்டார்கள் என்று அவர் கூறினார்.