
பினாங்கு, அக் 29 – பினாங்கு சுங்கை பக்காப் மருத்துவமனைக்கு
செனட்டர் டாக்டர் A. லிங்கேஸ்வரன் இன்று வருகை புரிந்தார். தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் இவ்வேளையில் தியாக உணர்வுடன் கடமை ஆற்றி வரும் மருத்துவர்கள், தாதியர்கள், உட்பட மருத்துவமனையின் அனைத்து பணியாளர்களுக்கும் தனது நன்றியை நேரடியாக தெரிவிக்கும் வகையில் இந்த வருகை அமைந்ததாக சுங்கை பக்காப் மருத்துவனையின் முன்னாள் இயக்குனருமான லிங்கேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இந்த தீபாவளி பெருநாள் சுகாதார அமைச்சின் பணியாளர் அனைவருக்கும் மகிழ்சியை கொண்டுவரும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர் அனைவருக்கும் தனது தீபாவளி நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.