Latestமலேசியா

பூச்சோங் கெலக்சி பூப்பந்து சங்கத்தின் கலப்பு இரட்டையர் போட்டி ரவிந்திரன் – நிஷாரினா ஜோடி வெற்றி

பூச்சோங் , ஜூலை 16 – பூச்சோங் கெலக்சி பூப்பந்து சங்கத்தின் (Kelab Badminton Puchong Galaksi) ஏற்பாட்டில் கலப்பு இரட்டையர் பூப்பந்தாட்டப் போட்டி அண்மையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் பூச்சோங் வட்டார மக்கள் மட்டும் அல்லாது கிள்ளான், சிரம்பான் மற்றும் மலாக்கா ஆகிய இடங்களைச் சேர்ந்த 18 முதல் 60 வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் என 32 விளையாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியை பூச்சோங் கெலக்சி பூப்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் பாஸ்கரன் அழகப்பன் தொடக்கி வைத்தார். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பதக்கம் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் இடத்தைப் பெற்ற ரவிந்திரன் ராஜகும்மாள் -நிஷாரினா கலைக்ககுமார் (Ravindran Rajakumal – Nishareena Kalaikumar ) ஜோடிக்கு 400 ரிங்கிட் பரிசுத் தொகை, நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

இரண்டாவது இடத்தை பெற்றதன் மூலம் லோகவர்மன் சேகர் , பிரசன்னா மதியழகன் இணை 300 ரிங்கிட்டை பரிசாகப் பெற்றனர். மூன்றாவது இடத்திற்கான 200 ரிங்கிட் பரிசை ஜக்டிப் சிங் – மாலா முருகோடா ஜோடியும், சரவணன் கருப்பன் – காஞ்சனா ஷன்முகம் இணையும் வென்றனர்.

முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டிக்கு அமோக ஆதரவும் வரவேற்பும் கிடைத்ததாக கெலக்சி பூப்பந்து சங்கத்தின் தலைவர் ராஜேஷ் பாபு கிட்ணன் தெரிவித்தார்.
இம்மாதிரியான விளையாட்டுப் போட்டிகள் மக்கள் மத்தியில் உடல் ஆரோக்கியம் பேணுவதற்கு மட்டுமின்றி ,சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த வழி வகுக்கும் என அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!