Latestமலேசியா

பூலாவ் பெர்ஹென்தியானில் உல்லாசத்தல முதலீட்டில் வர்த்தகரிடம் 500,000 ரிங்கிட் மோசடி

கோலாத்திரெங்கானு, அக் 16 – பூலாவ் பெர்ஹிந்தியானில்
(Pulau Berhentian ) நான்கு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்படாத உல்லாசத் தலத்தை மேம்படுத்துவதாகக் கூறப்பட்ட முதலீட்டில் வர்த்தகர் ஒருவர் 500,000 ரிங்கிட் ஏமாந்திருப்பதாக கோலாதிரெங்கானு போலீஸ் தலைவர் அஷ்லி முகமட் நோர்
( Azli Mohd Noor ) தெரிவித்திருக்கிறார். அந்த தீவில் உல்லாசத் தலம் ஒன்றை ஒரு நிறுவனம் மேம்படுத்தவிருப்பதால் அதில் முதலீடு செய்யும்படி கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு 23 ஆம்தேதி 44 வயதுடைய அந்த வர்த்தகருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 500,000 ரிங்கிட் மூலதன முதலீட்டைக் கொண்ட அந்த திட்டத்தில் இணைந்திருக்கும்வரை ஆண்டுதோறும் வருமானமாக 394,020 ரிங்கிட் பெறலாம் என மாராங்கை சேர்ந்த அந்த வர்த்தகருக்கு உறுதியளிக்கப்பட்டது.

இந்த திட்டத்தினால் கவரப்பட்ட அந்த வர்த்தகர் இது தொடர்பான கொள்முதல் உடன்பாட்டில் கையெழுத்திட்டதோடு அதற்கான வங்கிக் கணக்கில் கட்டம் கட்டமாக 500,000 ரிங்கிட்டையும் முழுமையாக செலுத்தியுள்ளார். பல ஆண்டுகள் காத்திருந்தும் வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு ஏற்ப லாபத் தொகை எதனையும் அந்த வர்த்தகர் பெறவில்லை. இந்த திட்டத்தை அந்த வர்த்தகருக்கு முதன் முதலில் அறிமுகம் செய்த Janah என்ற பெண் அதன் பிறகு தம்மிடம் தொடர்பு கொள்ளவில்லை என்பதால் தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அந்த வர்த்தகர் இது குறித்து போலீசில் புகார் செய்திருப்பதாக அஸ்லி முகமட் நோர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!