
பெங்களூரு, மார்ச்-24 – தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவின் பெங்களூருவில் 120 அடி உயர தேர் சாய்ந்ததில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்தனர்.
அனேக்கல் எனும் உட்புற கிராமப் பகுதியில் சனிக்கிழமையன்று அச்சம்பவம் நிகழ்ந்தது.
‘மதுரம்மா ஜத்ரா’ எனும் வருடாந்திர விழாவின் முக்கிய அம்சமாக 2 ராட்சத தேர்கள் இழுக்கப்படுவது வழக்கமாகும்.
அவ்வகையில் இவ்வாண்டு விழாவில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு முதலாவது தேரின் வடத்தைப் பிடித்து இழுத்துபோய்க் கொண்டிருந்த போது துரதிஷ்டவசமாக பலத்த காற்று வீசியது.
இதனால் நிலைத்தன்மை இழந்த தேர் செங்குத்தாக சரிந்தது.
தேர் சாய்வதை கண்ட பக்தர்கள், கயிற்றை போட்டு விட்ட தலைத்தெறிக்க ஓடினர்.
இதனால் பலர் நூலிழையில் உயிர் தப்பினர்.
தேர், சாய்ந்ததில் பல வாகனங்கள் சேதமுற்றன.
மரணமடைந்தவர் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த ஆடவர் என அடையாளம் கூறப்பட்டது.
சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தேர் சாயும் பரபரப்பான தருணங்கள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரவாகியுள்ளது.