Latest
பெட்டாலிங் ஜெயாவில் காணாமல் போன 17 வயது தவமலர்; கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை நாடும் போலீஸ்

பெட்டாலிங் ஜெயா, மார்ச்-3 – பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியேறிய 17 வயது பெண் பிள்ளையை கண்டுபிடிக்க, போலீஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
தவமலர் காணாமல் போனதாக சனிக்கிழமை மாலை புகார் கிடைத்ததாக, பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ஷாருல் நிசாம் ஜாஃபார் கூறினார்.
தவமலர் கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.05 மணிக்கு பெட்டாலிங் ஜெயா, செக்ஷன் 12-ல் உள்ள Jalan 12/6 எனுமிடத்தில் காணப்பட்டார்.
அவர் 159 சென்டி மீட்டர் உயரமும், நீண்ட கூந்தலும், ஒல்லியான உடலமைப்பையும் கொண்டவர்.
தவமலர் இருக்குமிடம் தெரிந்தாலோ அல்லது அவரை எங்கேயாவது பார்த்தலோ, அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புக் கொண்டு தகவல்களைக் கொடுத்துதவுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.