Latestமலேசியா

பெட்ரோலில் தண்ணீர் கலந்ததால் போர்சே பழுதடைந்தது கார் நிறுவனத்திற்கு 54,000 ரிங்கிட் வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர், மே 7 – தண்ணீர் கலந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பின் Porsche cayenne பழுதடைந்ததைத் தொடர்ந்து கார் நிறுவனத்திற்கு 54,000 ரிங்கிட்டிற்கும் மேலாக வழங்கும்படி Shell பெட்ரோல் நிலைய நடத்துனருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி Sungai Petai யிலுள்ள Shell நிலையத்தில் தண்ணீர் கலந்த பெட்ரேல் விநியோகித்ததால் Malacha Sdn Bhd நிறுவனம் DMY மற்றும் Family Sdn Bhd ட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் டாக்டர் Teoh Shu Yee
வாதியான Malacha Sdn Bhd ட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தார்.

தனது கார் இயந்திரம் பழுதானதற்கு பெட்ரோல் நிலையம் விநியோகித்த பெட்ரோலே காரணம் என வாதி வெற்றிகரமாக நிருபித்திருப்பதாக மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பிரதிவாதியின் பெட்ரோல் நிறுவனம் V-Power 97 Petrol நிரப்பிய பிறகே தனது SUV வாகனம் ஆற்றலை இழந்து சேதம் அடைந்ததை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கட்ட ஆவணங்களில் வாதியின் இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

அதன் பின்னரே அக்கார் Porsche Service Centre மையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு அங்கு பரிசோதிக்கப்பட்டதில் வாதியின் காரில் நிரப்பப்பட்ட பெட்ரோரில் நீர் கலந்ததால் பழுதடைந்தது உறுதியானது.

எனவே பழுதுபார்ப்பு செலவுகளுக்கு 48,568 ரிங்கிட் 05 சென் மற்றும் சுயேட்சை Adjuster ருக்கான கட்டணமாக 6,000 ரிங்கிட் மற்றும் வாதிக்கான வழக்கறிஞர் கட்டணமாக 10,000 ரிங்கிட்டையும் பிரதிவாதி வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!