தெமர்லோ, நவ 5 – Bentong , Taman Bentong Makmurரில் கேபள் கம்பிகளை திருடியதில் சம்பந்தப்பட்ட எழுவரில் 13 குற்ற பின்னணிகளைக் கொண்ட 40 வயது ஆடவன் கைது செய்யப்பட்டான். நவம்பர் 3 ஆம் தேதி அதிகாலை 2.45 மணியளவில் தெமர்லோ, Taman Keramat Mentakab பகுதியில் சந்தேக நபர்கள் கேபள்களை திருடும் காணொளி வைரலானது .
வீட்டு உரிமையாளர் ஒருவர் அவர்களது நடவடிக்கைகளை காணொளியில் பதிவு செய்வதை உணர்ந்து அவர்கள் MPV வாகனத்திலும் மற்றொரு காரிலும் தப்பியோடினர். அவர்களின் MPV வாகனத்தை போலீஸ் ரோந்து கார் துரத்திச் சென்றபோது அந்த வாகனம் வீடமைப்புப் பகுதியிலுள்ள கால்வாயில் விழுந்தது.
இதனை தொடர்ந்து அதிலிருந்தவர்களில் ஒருவன் கைது செய்யப்பட்டதோடு இதர மூவர் தப்பியோடி விட்டதாக தெமர்லோ போலீஸ் தலைவர் துணை கமிஷனர் மஸ்லான் ஹசான் ( Mazlan Hasan ) தெரிவித்தார். அந்த வாகனத்தில் இருந்து 153 கேபள் துண்டுகள் மற்றும் கம்பி வெட்டும் கருவிகள் உட்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மஸ்லான் கூறினார். குற்றவியல் சட்டத்தின் 379 ஆவது பிரிவின் கீழ் இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இதர சந்தேக நபர்களை போலீசார் தேடி வருவதாக மஸ்லான் கூறினார்.