Latestமலேசியா

பெந்தோங் சாலையில் கோர விபத்து; பெற்றோர் பலி;மகன் தீவிர காயம்

பெந்தோங், டிசம்பர் 11 – : கோலாலம்பூர் பெந்தோங் சாலையில் Kampung Ketari அருகே நேற்றிரவு இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன் மனைவி இருவரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவர்களின் மகன் பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளார்.

தகவல் அறிந்தவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், காருக்குள் சிக்குண்டு இருந்த மூவரையும் வெளியேற்றினர்.

இவ்விபத்தில் பலத்த காயங்களுக்கு ஆளான உயிரிழந்த அத்தம்பதியின் மகனும் மற்றொரு கார் ஓட்டுநரும் பெந்தோங் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

இறந்தவரின் வாகனம் கோலாலம்பூரிலிருந்து பெந்தோங் நோக்கி வந்துக்கொண்டிருந்த போது, எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது என்று விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், இருவரின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதைத் தொடர்ந்து போலீசார் விபத்துக்கான காரணத்தைத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!