பென்சில்வேனியா மொத்த விற்பனைக் கிடங்கிகிலிருந்து திருடுப் போன 100,000 முட்டைகள்
![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/th.jpeg)
பென்சில்வேனியா, பிப்ரவரி-6 – அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் ஒரு மொத்த விற்பனைக் கிடங்கிலிருந்து சுமார் 100,000 கரிம (organic) முட்டைகள் திருடுப் போயுள்ளன.
இதையடுத்து போலீஸார் திருடர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேசிய அளவில் முட்டைக்குப் பற்றாக்குறை நிலவுதால் அவற்றின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருடுபோன முட்டைகளின் விலை மலேசிய ரிங்கிட்டுக்கு 177,070 என கணிக்கப்படுகிறது.
அச்சம்பவத்தை விசாரித்து வரும் பென்சில்வேனியா மாநில போலீஸ் தலைவர் Megan Frazer, 12 ஆண்டு கால அனுபவத்தில் இதற்கு முன்பு ஒருபோதும் முட்டைத் திருட்டை தாம் சந்தித்ததில்லை என்றார்.
ஆக மோசமென்றால், 10 ஆண்டுகளுக்கு முன்பு கோழிகளோடு சேர்த்து ஒரு கோழி கூண்டு திருடு போனது தான் என அவர் சொன்னார்.
ஆனால், இப்போது நடந்திருப்பது பெரியத் திருட்டு; களவுப்போன முட்டைகளின் மதிப்பே அதற்கு சான்று என்றார் அவர்.
அமெரிக்கா முழுவதும் முட்டை விலைகள் கடந்தாண்டு முதல் 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன.
பறவைக் காய்ச்சலுடன் விவசாயிகள் போராடி வருகின்றனர்; நோய் பரவுவதைத் தடுக்க மில்லியன் கணக்கான கோழிகளைக் கொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
டிசம்பர் முதல் 13 மில்லியனுக்கும் அதிகமான கோழிகள் கொல்லப்பட்டுள்ளன.
ஜனவரி இறுதியில் முட்டைகளின் சராசரி விலை ஒரு டசனுக்கு 5.29 டாலராக பதிவாகியது.
இதுவே கடந்தாண்டு இறுதியில் வெறும் 3.50 டாலராக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.