
கோலாலம்பூர், ஜன 19 – இந்த ஆண்டு நாடு முழுவதிலும் உள்ள தனது அமலாக்க அதிகாரிகளுக்கு உடலில் அணியும் கேமராக்களின் பயன்பாட்டை சாலை போக்குவரத்துத்துறை விரிவுபடுத்தவிருக்கிறது என அதன் தலைமை இயக்குநர் Datuk Aedy Fadly தெரிவித்திருக்கிறார்.
உடலில் அணிவதற்கான கூடுதல் கேமராக்களை வாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அவை அனைத்து மாநில அலுவலகங்களுக்கும் விரைவில் அனுப்பிவைக்கப்படும்.
கடந்த ஆண்டு அக்டோபரில் தொடக்கக் கட்டமாக இந்த நடவடிக்கை தொடங்கியதைத் தொடர்ந்து 300 க்கும் மேற்பட்ட யூனிட்டுகள் கொண்ட கேமராக்கள் அதிகரிக்கப்படும் என்றும் இதன்வழி இந்த ஆண்டு அந்த கேமராக்களின் எண்ணிக்கை மொத்தம் 500 ஆக எட்டக்கூடும் என சாலை போக்குவரத்துத்துறை கணித்துள்ளது.
அமலாக்கப் பணியாளர்களின் அனைத்து அசைவுகள் மற்றும் செயல்பாடுகளையும், தரையில் எழும் எந்தவொரு பிரச்னைகளையும் பதிவு செய்யும் அதே வேளையில், அதிகாரிகளின் நேர்மை குறித்து பொதுமக்களுக்கு உறுதியளிக்க கேமராக்கள் உதவுகின்றன என Aedy Fadly தெரிவித்தார்.
இன்று Media Prima நிறுவனத்தின் Balai Beritaவுக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டபோது என்று அவர் இத்தகவலை வெளியிட்டார்.



