Latestமலேசியா

பெரிய அலைகள் நேரத்தில் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் – மலேசிய தீயணைப்பு துறை எச்சரிக்கை

குவாலா நெரூஸ், திரெங்கானு, டிசம்பர் 15 – வடகிழக்கு பருவமழை நேரத்தில், சிலர் மனஅழுத்தம் குறையுமென (‘healing’) கடற்கரைக்கு செல்வது உண்மையிலேயே ஆபத்தான ஒன்று என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையான JBPM எச்சரித்துள்ளது.

பருவமழை காலத்தில் கடற்கரையை நெருங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் கடற்கரை மீனவர்களும் வலை வீசுதல், மீன் பிடித்தல் போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென குவாலா நெரூஸ் JBPM தலைவர் Azmi Omar கூறியுள்ளார்.

இந்நேரத்தில் பெரிய அலைகள், பலமான காற்று மற்றும் கனமழையினால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளதாக கூறப்படுகின்றது.

முக்கியமாக Pantai Batu Rakit, Pantai Seberang Takir, மற்றும் திரெங்கானு பல்கலைகழமான UMT சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் மக்கள் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் JBPM தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!