Latestமலேசியா

பெர்நாஸ் பன்னாட்டு பிரான்சைஸ் விழா (PIFF) 2025: மலேசியாவின் பிரான்சைஸ் துறையில் புதிய முன்னேற்றங்கள்

கோலாலம்பூர், ஜனவரி 22 – 2025ஆம் ஆண்டுக்கான PIFF எனும் பெர்னாஸ் பன்னாட்டு பிரான்சைஸ் (franchise) விழாவை அறிவித்துள்ளது தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் கீழ் செயல்படும் பெர்நாஸ் நிறுவனம்.

‘Brew Your Success: Empowering Entrepreneurs’ என்ற கருப்பொருளுடன், இந்த விழா மலேசியாவின் பிரான்சைஸ் துறையில் புதியதொரு முயற்சியாக நடைபெறவிருக்கிறது.

மலேசியாவில் வேகமாக வளர்ந்து வரும் காபி, தேநீர் மற்றும் கஃபே துறையை மையமாகக் கொண்ட PIFF 2025, தொழில்முனைவர்கள் மற்றும் புதிய பிரான்சைஸ் நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்க சிறந்த தளமாக முனைவு கொள்கிறது.

அவ்வகையில், இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளாக, உள்நாட்டு மற்றும் அனைத்துலக காபி, தேநீர், கஃபே பிராண்டுகளின் பங்கேற்றல், தொழில்முனைவர்கள் மற்றும் வணிக சந்திப்பு நிகழ்ச்சிகள், லாட்டே கலை மற்றும் பரிஸ்தா உட்பட ஈ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகள், சிறிய அளவிலான கச்சேரிகள் என பல அங்கங்கள் இடம்பெறவிருக்கின்றன.

எதிர்வரும் பிப்ரவரி 7ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை கோலாலம்பூர் மாநாடு மையத்தின் 4 மற்றும் 5ஆம் மண்டபங்களில் இவ்விழா நடைபெறவிருக்கிறது.

மலேசிய தொழில்முனைவர்களின் முயற்சிகளை ஊக்குவிக்கவும், அவர்களின் வளர்ச்சியை முன்னேற்றவும் PIFF 2025 நம்பிக்கையான தளமாக அமையும் என அதன் அதிகாரப்பூர்வத் திறப்பு விழாவில் பெர்நாஸ் நிறுவனத்தின் தலைவர் டத்தோ ஹசிமா சைனுடின் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்களும் தொழிமுனைவர்களும் PIFF இணையத்தளம் மூலம் பதிவு செய்யலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!