பெர்னாஸ்-இன் ‘Media Rush’ 2025; ஊடகத்துறையினர் & தொழில்முனைவோரிடையே உறவை வலுப்படுத்தும் முயற்சி

கோலாலம்பூர், அக்டோபர் 9 –
நாட்டின் பிரான்சைஸ் (Franchise) துறையின் வளர்ச்சியை முன்னெடுத்து வரும் PERNAS, தன்னுடைய மூலதன முயற்சிகளின் (strategic initiatives) தொடர்ச்சியாக, அண்மையில் வாங்சா வாக் மாலில் (Wangsa Walk Mall), ஊடகத்துறையினர் மற்றும் தொழில்முனைவோரிடையே உறவை வலுப்படுத்தும் நோக்கில் ‘மீடியா ரஷ் பை பெர்னாஸ் 2025’ (Media Rush by Pernas 2025) என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.
நிதி அமைச்சின் கீழ் இயங்கும் இந்நிறுவனம் ஏற்பாடு செய்த treasure hunt’ வடிவிலான இந்நிகழ்ச்சியில், ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெர்னாஸ் பணியாளர்கள் உட்பட சுமார் 50 பேர் உற்சாகமாக பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சி, வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், பெர்னாஸ் மற்றும் ஊடகத்துறையினருக்கிடையேயான கூட்டு ஒத்துழைப்பையும் உறுதியான பணிசார்ந்த உறவையும் மேம்படுத்தும் ஒரு முக்கிய தளமாக அமைந்தது.
நிகழ்ச்சியில் மீடியா பிரிமா (Media Prima), ஆர்டிஎம் (RTM), வணக்கம் மலேசியா (Vanakkam Malaysia), ஐகிம் எஃஎம் (IKIM FM), சினார் ஹாரியான் (Sinar Harian), மலேசியன் கேஸெட் (Malaysian Gazette), நன்யாங் சியாங் பாவ் (Nanyang Siang Pau) உள்ளிட்ட பல முக்கிய ஊடக நிறுவனங்கள் பங்கேற்றன.
ஊடகத்துறை நாட்டின் தொழில்முனைவோர் மற்றும் பிரான்சைஸ் துறைக்கான தகவல்களைப் வெகு விரைவில் பரப்புவதோடு மட்டுமல்லாமல் பெர்னாஸ்-இன் பிரான்சைஸ் தொழில்முனைவோர்களின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிக்கும் என்று PERNAS தெரிவித்தது.
இந்த நிகழ்வு, பெர்னாஸ் மற்றும் ஊடகத்துறை இடையேயான உறவை மேலும் நெருக்கமாக்கி, “தொழில்முனைவோர் வளர்ச்சி, ஊடக ஒத்துழைப்பின் வழியே” என்ற நோக்கை வலியுறுத்தியது.