Latestமலேசியா

பெர்னாஸ் ஏற்பாட்டில் ‘BIZFRANCAIS’ கிளந்தான் 2025

கோத்தா பாரு, ஜூன் 24 – கடந்த ஜூன் 21 ஆம் தேதி, கோத்தா பாரு மைதீன் துஞ்சுங்கில் (Mydin Tunjong, Kota Bharu), ‘பெர்பாடானன் நேஷனல் பெர்ஹாட்’ (PERNAS), மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகத்துடன் (UMK) இணைந்து ‘BIZFRANCAIS’ கிளந்தான் 2025 என்கின்ற வணிகத்துறை விரிவாக்க முகாம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இத்திட்டத்தை ஊக்கமளிக்கும் வகையில் அரசு நிறுவனங்கள், உரிமையாளர் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் உட்பட 30 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்விழாவை PERNAS தலைவர் டத்தோ முஹமட் ரொசான் பின் முஹமட் கஸாலி (Datuk Mohamed Rozhan bin Mohd Ghazalli) தலைமை தாங்கியுள்ள நிலையில் Pernas இன் தலைமை நிர்வாக அதிகாரி திரு. அஸிஸாம், Pernas Franchise பிரிவு தலைவர் மற்றும் KUSKOP ஏஜென்சியின் பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தேசிய மற்றும் சர்வதேச நிலையில் மலேசிய பிரான்சிஸ் தொழிலை மேம்படுத்துவதற்காக, நாடு முழுவதும் பிரான்சிஸ் தொழில்முனைவோரை வழிநடத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் பெர்னாஸ் தொடர்ந்து முயற்சிகளை எடுக்கும் என்று அதன் தலைவர் விளக்கமளித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!