Latestமலேசியா

பெர்லிஸ் ஆராவ் அரண்மனை அருகே பூச்சாடிகளைத் தள்ளி உடைத்த மனநலம் பாதிக்கப்பட்ட ஆடவர்

ஆராவ், டிசம்பர்-23 – பெர்லிஸ், ஆராவ் அரண்மனை அருகே சாலையோரம் நெடுகிலும் பூச்சாடிகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம், குறிப்பிட்ட தரப்பினரின் சதிநாச வேலையல்ல.

MPK எனப்படும் கங்கார் நகராண்மைக் கழகத் தலைவர் Affendi Rajini Kanth அதனை உறுதிபடுத்தியுள்ளார்.

மாறாக, பொது மக்கள் கொடுத்த தகவல் மற்றும் சமூக ஊடகங்களில் வைரலான வீடியோக்களைப் பார்க்கும் போது, ஒரு தனிநபர் வேண்டுமென்றே அப்பூச்சாடிகளை தள்ளி உடைப்பது தெரிகிறது.

எனினும், அது சதிநாச வேலையல்ல; காரணம், அவ்வாடவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என MPK பணியாளர்கள் உறுதிபடுத்தியதாக அவர் சொன்னார்.

சாலையோரத்தை அழகுப்படுத்தும் நோக்கில் வைக்கப்பட்டிருந்த பூச்சாடிகளில் 10-க்கும் மேற்பட்டவைத் தள்ளி உடைக்கப்பட்டுள்ளன.

மற்றபடி வேறெந்த சேதாரங்களும் ஏற்படவில்லை என்றார் அவர்.

இவ்வேளையில், 42 வயது சந்தேக நபர் கைதாகியிருப்பதை ஆராவ் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் Ahmad Mohsin Md Rodi உறுதிபடுத்தியுள்ளார்.

பூச்சாடிகளை உடைத்ததை ஒப்புக் கொண்ட அந்நபர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மனநல சிகிச்சைக்காக துவாங்கு ஃபாவ்சியா மருத்துவமனையின் மனநல ஆரோக்கியப் பிரிவுக்கு அவர் அனுப்பப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!