Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்
பெல்ஜியமில் தொடர் துப்பாக்கிச் சூடு; மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை

புத்ராஜெயா, பிப்ரவரி-8 – பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் (Brussels) அண்மையில் நிகழ்ந்த தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை.
வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அதனை உறுதிப்படுத்தியது.
என்ற போதிலும், அங்குள்ள மலேசியத் தூதரகம் நிலவரங்களை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், பெல்ஜியமில் வசிக்கும் அல்லது அந்நாட்டுக்கு தற்சமயம் சுற்றுலா மேற்கொண்டுள்ள மலேசியர்கள், உள்ளூர் அதிகாரிகள் உத்தரவுகளைப் பின்பற்றி விழுப்புடன் இருக்குமாறு, விஸ்மா புத்ரா கேட்டுக் கொண்டது.
பெல்ஜியமில் இன்னும் மலேசியத் தூதரகத்திடம் பதிந்துக்கொள்ளாத மலேசியர்கள் விரைந்து அவ்வாறு செய்திடவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
கடந்த 72 மணி நேரங்களில் பெல்ஜியமில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டு, மூவர் காயமடைந்துள்ளனர்.