
பேராக், செப்டம்பர் 8 – நேற்று, பேராக் ஸ்ரீ இஸ்கண்டார், கம்போங் தெலுக் கெபயாங், போத்தா கிரியில் ஆற்றுமணல் சேகரிக்கும் பகுதியில் ஏற்பட்ட மண் புதைப்பு சம்பவத்தில் ஆடவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து மூவர் காயமடைந்தனர்.
தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள், மூவர் மார்பு உயரம் வரையிருக்கும் மணலில் சிக்கியிருந்தனர் என்றும் மற்றொருவர் சுமார் மூன்று மீட்டர் ஆழத்தில் முழுவதுமாக புதைந்திருந்தார் என்பதையும் கண்டறிந்தனர் என்று மூத்த செயல்பாட்டு அதிகாரி முஹமட் அசிரஃப் மாட் இசா (Muhammad Asyraf Mat Isa) தெரிவித்தார்.
கடினமான மண் நிலை காரணத்தினால் மீட்பு பணிகள் சவாலாக இருந்தன எனவும் எட்டு உறுப்பினர்கள் கொண்ட தீயணைப்பு குழு, அகழ்வாராய்ச்சி இயந்திரத்தின் உதவியுடன் தீவிரமாகப் பணியில் இறங்கினர் எனவும் அறியப்படுகின்றது.
உயிரிழந்தவரின் உடல் காவல்துறைக்கு ஒப்படைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பின்பு ஸ்ரீ இஸ்கண்டார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.