Latestமலேசியா

பேராவில் பேருந்து சோதனையில் 11 பயணிகளை விட்டுவிட்டு ஓட்டுநர் தப்பியோடினார்

ஈப்போ, நவ 29 – பேராவில் RTC அருகே Op Bersepadu ஒருங்கிணைந்த நடவடிக்கையில் பேருந்து ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது அதில் இருந்த 11 பயணிகளை விட்டுவிட்டு ஓட்டுநர் கீழே இறங்கி தப்பியோடினார். TBS முனையத்திலிருந்து 11 பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த பேருந்து பினாங்கிற்கான சேவையில் ஈடுபட்டிருந்ததாக நம்பப்படுகிறது. அந்த பேருந்து ஓட்டுநர் போதைப் பொருளை தவறாக பயனப்படுத்தியதைத் தொடர்ந்து அவர் தப்பியோடியதாக பேரா தேசிய பாதுகாப்பு மன்றத்தின் இயக்குனர் முகமட் ஷவாவி ( Mohd Zawawi Zakaria ) தெரிவித்தார்.

பரிசோதனை செய்யப்படும் பகுதிக்குள் இரவு 10.30 மணியளவில் அந்த பேருந்தை ஒரு ஓரமாக நிறுத்திய அதன் ஓட்டுநர் அங்கிருந்து தலைமறைவானார். பேருந்து ஓட்டுநர் இருக்கைப் பகுதியில் போதைப் பொருளை பயன்படுத்துவதற்கான கருவி கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த சந்தேகப் பேர்வழியை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனை நடவடிக்கையில் குடிநுழைவத்துறை, தேசிய போதைப் பொருள் துடைத்தொழிப்பு நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 61 வாகன ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து விதிகளை மீறியதற்காக சம்மன்கள் வழங்கப்பட்டதாக முகமட் ஷவாவி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!