
ஜோகூர் பாரு, செப்டம்பர்-3 – ஜோகூர் பாரு, பண்டார் ஊடா உத்தமாவில் micromobility இரகத்திலான இலகு இரக வாகனப் பயன்பாடு குறித்த டிக் டோக் வீடியோ வைரலாகியுள்ள நிலையில், போலீஸ் அது குறித்து விசாரணையைத் தொடக்கியுள்ளது.
ஆகஸ்ட் 15-ம் தேதி ஜாலான் ஊடா உத்தாமாவில் அவ்வீடியோ பதிவுச் செய்யப்பட்டதாக நம்பப்படுவதாக, ஜோகூர் பாரு உத்தாரா போலீஸ் தலைவர் பல்வீர் சிங் கூறினார்.
30 வயதிலான ஆடவர், ஒரு பெண் மற்றும் குழந்தையோடு அந்த வாகனத்தில் பயணிப்பது வீடியோவில் தெரிகிறது.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் விசாரணைக்கு உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசியச் சாலைகளில் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, e-skuter, hoverboard, monowheel, segway போன்ற இலகுரக micromobility வாகனங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.