Latestமலேசியா

பொந்தியானில் 30 அடி உயர மரம் சாய்ந்ததில், மண்வாரி இயந்திர ஓட்டுநர் பரிதாப பலி

பொந்தியான், டிசம்பர் 23-ஜோகூர் பொந்தியானில் மண்வாரி இயந்திரத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஓர் ஆடவர், மரம் சாய்ந்து மேலே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம், Serkat, Jalan Muafakat Dua-வில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் நேற்று காலை 11 மணிக்கு மேல் நிகழ்ந்தது.

சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு – மீட்புத் துறையினர், சுமார் 30 அடி உயர மரம், மண்வாரி இயந்திரத்தின் மீது விழுந்து, அவ்வாடவர் இடிபாடுகளில் சிக்கியிருந்ததைக் கண்டது.

மரத்தை வெட்டி வெளியே மீட்ட போதும், 27 வயது அந்நபர் உயிரிழந்து விட்டதை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.

சடலம் மேல் விசாரணைக்காக போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!