
கோலாலம்பூர், ஏப்ரல்-21- கோலாலம்பூர், பண்டான் பெர்டானாவில் உள்ள இரவு கேளிக்கை மையத்தில் போதைப்பொருள் உட்கொண்டு ஆட்டம் போட்ட சந்தேகத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கைதாகியுள்ளார்.
43 வயது அந்நபர் வெள்ளிக்கிழமை மாலை கைதானதாக போலீஸ் வட்டாரங்கள் கூறின.
Amphetamine, methamphetamine, ketamine, benzodiazepine ஆகிய 4 வகைப் போதைப்பொட்களை அவர் உட்கொண்டதும் சோதனையில் உறுதியானது.
அக்கேளிக்கை மையத்தில் இருந்த ஒரு நபர் மூலம் பெறப்பட்ட போதைப்பொருளை, பானத்தில் கலந்து குடித்ததை அந்த இன்ஸ்பெக்டர் ஒப்புக் கொண்டார்.
அச்சம்பவத்தை உறுதிப்படுத்திய சிலாங்கூர் போலீல் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான், சந்தேக நபர் ஒரு நாள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சொன்னார்.