Latestமலேசியா

போர்ட் டிக்சன் தெலுக் கெமாங்கிலுள்ள ஒரு வீட்டில் பெண் சிசுவை கொன்றதாக காதல் ஜோடி மீது குற்றச்சாட்டு

சிரம்பான், ஜன 31 – பெண் சிசுவை கொன்றதாக ஒரு காதல் ஜோடி மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 18 வயதுடைய நுருல் அய்ன் ஹஸ்லான் (Nurul Ain Haslan) , 21 வயதுடைய முகமட் எமிர் இர்பான் ஹஸ்ரின் (Muhammad Emer Irfan Hasren) ஆகிய இருவரும் மாஜிஸ்திரேட் நுருல் சக்கினா ரோஸ்லி ( Nurul Saqinah Rosli) முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக தலையசைத்தனர்.

அந்த சிசுவுக்கு மரணம் ஏற்படுத்தும் நோக்கத்தில் அதனை அவர்கள் கொலை செய்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 21ஆம்தேதி விடியற்காலை மணி 5.30 முதல் மாலை 4 மணிவரைக்குமிடையே போர்ட் டிக்சன் தெலுக் கெமாங்கிலுள்ள (Teluk Kemang) ஒரு வீட்டில் அவர்கள் இக்குற்றத்தை புரிந்ததாக தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

மரண விசாரண அறிக்கை ,ரசாயன மற்றும் தடயயியல் அறிக்கைக்காக இந்த குற்றச்சாட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி மறு வாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.

இதற்கு முன் தெலுக் கெமாங் (Teluk Kemang) , Taman Intan Perdanaவில் உள்ள வீட்டினுல் ஒரு பேக்கில் அந்த குழந்தையின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டிக்சனில் இரண்டு வெவ்வேறு இடங்ளில் அந்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.

அந்த சிசுவின் இருதயப் பகுதி கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டதால் அது இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!