![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/thumbs_b_c_28a09cbe13827a67c7c7989dacdc17a9-780x470.jpg)
வாஷிங்டன், பிப்ரவரி-7 – சண்டை முடிந்து, இஸ்ரேல் காசாவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அப்போது அப்பகுதி மக்கள் வேறு இடங்களில் பாதுகாப்பாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருப்பார்கள்; காசாவும் புதிய நவீன குடியிருப்புகளால் அழகாகியிருக்கும்.
எனவே, அம்மண்ணில் அமெரிக்க துருப்புக்களுக்கு வேலையிருக்காது என டிரம்ப் சொன்னார்.
இதே டிரம்ப் தான் முன்னதாக, காசாவில் சிறிய எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவத்தை களமிறக்கும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
காசாவை அமெரிக்கா கையகப்படுத்தப் போவதாக அறிவித்து உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சில தினங்களுக்குப் பிறகு, டிரம்ப் தனது கூற்றை தெளிவுப்படுத்தியுள்ளார்.
காசாவைக் கையகப்படுத்தும் டிரம்ப்பின் திட்டத்திற்கு பாலஸ்தீனமும் உலக நாடுகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தாலும், இஸ்ரேல் ‘சிவப்புக் கம்பளம்’ விரித்து வரவேற்றது.
காசாவிலிருந்து பாலஸ்தீனர்கள் பேரளவில் தன்னார்வமாக அடிப்படையில் வெளியேறுவதை அனுமதிக்க தயாராகுமாறு, இஸ்ரேல் தனது இராணுவத்திற்கும் உத்தரவிட்டது.
பதவிக்கு வந்த வேகத்திலேயே இஸ்ரேல் – காசா விவகாரத்தில் டிரம்ப் அதிரடி காட்டினாலும், காசாவை கையகப்படுத்தும் திட்டத்தை அவர் உண்மையிலேயே தொடருவரா என்பது நடுநிலையாளர்கள் மத்தியில் கேள்வியாகவே உள்ளது.
வெளியுறவுக் கொள்கையில் மோதல் போக்கைக் கடைப்பிடித்து, முதல் தவணையில் சம்பாதித்த வெறுப்பை அவர் மீண்டும் சம்பாதிக்கத் துணிவாரா என்பதே அக்கேள்வியாகும்.